சட்டசபை கட்டிடம் முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற டாக்டர்; கர்நாடகாவில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் சட்டசபை (விதான் சவுதா) அமைந்துள்ள கட்டிடத்திற்கு முன் டாக்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

38 வயதுடைய டாக்டர் நாகேந்திரப்பா ஷிரூர் என்பவர் கர்நாடகா சட்டசபை முன் வந்து, பொதுமக்கள் பலர் முன்னிலையில் திடீரென விஷ பாட்டிலை திறந்து அதனை வாயில் ஊற்றி தற்கொலைக்கு  முயன்றுள்ளார். 

இந்த சம்பவத்தின் போது, காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதனை கவனித்து, உடனடியாக ஓடி போய் விஷ பாட்டிலை பறித்து தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த டாக்டரை மீட்டு, அவசர சிகிச்சைக்காக பவ்ரிங் அண்ட் லேடி கர்சன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது.

வலதுசாரி செயற்பாட்டாளரான புனீத் கெரேஹள்ளி என்பவருடன் சேர்ந்து அனேகல் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக டாக்டர் நாகேந்திரப்பாவுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இதுதொடர்பான விசாரணையில், அவரிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு துன்புறுத்தியதால், கடுமையான மனஅழுத்தம் ஏற்பட்டு இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பொலிஸாரின் விசாரணையில் டாக்டர் இதனை அவரது குற்றச்சாட்டாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விதான் சவுதா போலீசார், டாக்டருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A doctor caused a stir by attempting suicide by consuming poison in front of the Karnataka Legislative Assembly building


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->