கேரள இலக்கிய திருவிழா; சுனிதா வில்லியம்ஸ் -உடன் நடிகை பாவனா; சர்வதேச அளவில் சுமார் 500 பேச்சாளர்கள் அழைப்பு..!
Actress Bhavana with Sunita Williams at the Kerala Literature Festival
கேரளாவில் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் நடிகை பாவனாவும் கலந்துகொண்டார். அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸை சந்தித்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவனா பதிவிட்டுள்ளதாவது:
''ஒருங்கே இருக்கும் பாக்கியம் எமக்குக் கிடைத்தததற்கு நன்றி என்றும் இது தமது வாழ்நாள் மாற்றத்திற்கானதொரு தருணம்'' என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60). இந்திய வம்சாவளி சேர்ந்த இவர், நாசாவில் 27 ஆண்டுகால பணிக் காலத்தில் 608 நாள்கள் விண்வெளியில் தங்கி வரலாற்றுச் சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு டிசம்பர்27-ஆம் தேதி முதல் சுனிதா ஓய்வுபெற்றுள்ளார்.
இந்த கேரள இலக்கியத் திருவிழாவில் பங்கேற்க சுனிதா வில்லியம்ஸ் மட்டுமில்லாது நோபல், புக்கர் பரிசு வென்றவர்கள் உள்பட சர்வதேச அளவில் சுமார் 500 பேச்சாளர்கள் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Actress Bhavana with Sunita Williams at the Kerala Literature Festival