காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டலாம் என அச்சம்..!
86 dead in Congo boat accident
காங்கோ நாட்டில் வடமேற்கில் உள்ள ஈக்வடார் மாகாணத்தில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது. இதில் பயணம் செய்த 86 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலியானவர்களில் 60-க்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
ஆப்ரிக்காவில் பல நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்காக தப்பித்து செல்கின்றனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக படகில் செல்கின்ற நிலையில், பாரம் தாங்காமல் இயற்கை அனர்த்தங்களாலும் படகு கவிழ்ந்துஉயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இந்த படகு விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், அதிகளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டதுமே காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டவும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
English Summary
86 dead in Congo boat accident