சீனாவில் சோதனை மரபணு சிகிச்சைக்குப் 06 வயது சிறுமி பரிதாபமாக பலி; குழந்தையும், ரூ.6.7 கோடியையும் இழந்த பெற்றோர்..! - Seithipunal
Seithipunal


சீனாவில் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 06 வயது சிறுமிக்குச் ஜீன் எடிட்டிங் படி பரிசோதனைக்கு பிறகு செய்யப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுமியின் மரணம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வறிக்கையில் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதைதொடர்ந்து, அந்நாட்டுப் பல்கலைக்கழகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

'Mei' என்ற புனைப் பெயரிடப்பட்ட குறித்த 06 வயது சிறுமி, மூளை வளர்ச்சி தொடர்பான அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். அச்சிறுமியின் மூளையிலுள்ள பிறழ்ந்த மரபணுவை மாற்றி, அவருக்குத் தேவையான புரதத்தைச் சுரக்க வைப்பதற்காகத் தலைமை நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு தலைமையில் புதிய ஜீன் எடிட்டிங் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காகச் சிறுமியின் பெற்றோரிடம் இருந்து 800,000 டாலருக்கும் அதிகமான தொகையை ரூ. 6.7 கோடிக்கும் மேல் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்பின்னர் அந்த சிறுமியின் மூளையைச் சென்றடையும் வகையில் பல டிரில்லியன் வைரஸ்கள் சிறுமியின் தண்டுவடப் பகுதி வழியாகச் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அந்த சிறுமி உயிரிழந்த போதிலும், நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து புகழ்பெற்ற 'நேச்சர்' இதழில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறுமி மேயின் உயிரிழப்பு குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. அத்துடன் இந்த சிகிச்சையின் போது ஏற்படும் அபாயங்கள் குறித்துச் சிறுமியின் பெற்றோருக்குச் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் நரம்பியல் நிபுணர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஷாங்காய் ஜியாவோ டாங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி சிறப்புக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சி நெறிமுறைகளை மீறும் செயல்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2018-இல் சீனாவில் ஹீ ஜியான்குய் என்ற ஆய்வாளர் இரகசியமாக ஜீன் எடிட்டிங் குழந்தைகள் உருவாக்கம் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய சம்பவம் சீனாவின் பயோடெக் துறையின் நம்பகத்தன்மைக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் இந்த சம்பவம் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 year old girl dies tragically after undergoing gene editing treatment in China


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->