ஐசிசி டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய அணி; சஞ்சுவின் சாதனையை முறியடிப்பாரா இஷான் கிஷான்..?
India regains top spot in ICC T20 rankings
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 03 நாட்கள் கொண்ட டி 20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த முதல் 02 போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இதில், இரண்டாவது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற அபார வெற்றியின் மூலம், இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 0-4 எனத் இந்திய அணி தோற்றதால் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்திற்குத் தற்காலிகமாக தள்ளப்பட்டது. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே ஜிம்பாப்வே தொடரில் காட்டிய அதிரடியால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 268 ரேட்டிங் புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், புள்ளி விவரங்களின் (Decimal calculation) அடிப்படையில் இந்திய அணி இங்கிலாந்தை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இன்று ஜிம்பாப்வேக்கு எதிராக மூன்றாவது போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் 67 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஒரு நாட்காட்டி ஆண்டில் இந்திய விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனின் (2024-இல் 436 ரன்கள்) சாதனையையும் இஷான் கிஷன் முறியடிக்க வாய்ப்புள்ளது.
English Summary
India regains top spot in ICC T20 rankings