தேவாலயம் மீது வான்வழி தாக்குதல்.. 2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி..!!
5 people including 2 year old child killed in airstrike by Myanmar Army
மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மியான்மர் மக்கள் ராணுவத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை மியான்மர் ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இதுவரை மியான்மர் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1,500க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படும் கிளர்ச்சி குழுக்களில் கரேன் பழங்குடியின மக்கள் கிளர்ச்சி குழுவும் ஒன்று. இந்தக் கிளர்ச்சி குழுக்கள் மியான்மரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தாய்லாந்து நாட்டின் எல்லையொட்டி உள்ள கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை கரேன் பழங்குடியின மக்கள் வசிக்கும் இரண்டு கிராமங்கள் மீது மியான்மர் ராணுவம் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. கிரேன் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள 2 தேவாலயங்கள் மீது போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த 2 வயது பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
5 people including 2 year old child killed in airstrike by Myanmar Army