அல்ஜீரியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ.! இதுவரை 38 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் கிழக்கு பகுதியில் துனிசியாவின் எல்லை நகரமான எல் டார்ஃப் நகரை சுற்றியுள்ள மலைப்பகுதியில் காட்டுத் தீ பற்றி மிக வேகமாக பரவி வருகிறது.

8 மாகாணங்களை சுற்றி காட்டுத்தீ பரவி உள்ள நிலையில், தீயில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் எல் டார்ஃப், செட்டிஃப், சூக் அஹ்ராஸ், ஜிஜெல், ஸ்கிக்டா மற்றும் திபாசா நகரங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகள் மற்றும் 1800 ஹெக்டேர் நிலங்கள் காட்டுத்தீயால் அழிந்துள்ளன.

இதையடுத்து மலைப்பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் காட்டுத்தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

38 died in severe forest fire in algeria


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->