தெற்கு சூடான் :: போப் பிரான்சிஸ் வருகைக்கு முன்னதாக தாக்குதல் - 27 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தெற்கு சூடானில் போப் பிரான்சிஸ் வருகைக்கு முன்னதாக நடந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் மற்றும் போட்டி இன குழுக்களால் நாடு முழுவதும் வன்முறை அரங்கேற்றி அப்பாவி கொல்லப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேரி வருகின்றன.

இந்நிலையில் மோதல்கள் நிறைந்த நாட்டில் அமைதியை ஊக்குவிக்கும் நோக்கில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் மூன்று நாள் பயணமாக தெற்கு சூடான் சென்றார். ஆனால் அவரது வருகைக்கு முன்னதாக தெற்கு சூடானில் நடந்த பயங்கர தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மத்திய ஈக்வடோரியாவின் காஜோ-கேஜி கவுண்டியில் உள்ள கால்நடை முகாம் மீது ஆயுதமேந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 27 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

27 Killed In Attack by South Sudan On The Eve Of Pope Francis Visit


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->