''விடியல் தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது''; திமுகவின் குறைகளை பட்டியலிட்டுள்ள செல்லூர் ராஜு..! - Seithipunal
Seithipunal


"விடியல் தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது. திமுக ஆட்சியில் வரி மேல் வரி விதிப்பதால் மக்களுக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளனர்.'' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. அதாவது, கட்சி பொதுக்கூட்டங்கள், வாக்கு சேகரிப்பு நிகழ்வுகள், கட்சிகளுடன்  கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிப் பங்கீடு போன்ற தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், மதுரை முனிச்சாலை சந்திப்பில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அதிமுக சார்பில், 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கினார். 

அதில், பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 உதவி தொகை, அனைவருக்கும் அம்மா இல்லம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து, 150 நாட்கள் வேலைத் திட்டம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 25,000 மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நோட்டீஸில் இடம்பெற்றிருந்தன.

இதனைத்தொடர்ந்து, இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர், விடியல் தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திமுக ஆட்சியில் வரி மேல் வரி விதிப்பதால் மக்களுக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஃபேன் போட்டால் மின் கட்டணம் அதிகரிக்கும் என மக்கள் ஃபேனை கூட போட தயக்கம் காட்டுகிறார்கள் என்று  தெரிவித்துள்ளதோடு, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக சொல்வதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும். ஆனால், இனி அதிமுக சொல்லாதையும் செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் புதிது புதிதாக ஊழல் செய்யப்பட்டதாகவும்,  அலைகாற்றில் கருணாநிதி 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து உள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடந்த 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்றும், தமிழகத்தில் ஒரு சொட்டு மதுபானம் கூட இல்லாமல் அண்ணன் ஸ்டாலின் முதல் கையெழுத்திடுவார் என கனிமொழி கூறினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் தற்போது அதிகரித்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிமுக 10 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்துள்ளது. ஆனால், திமுகவின் 05 ஆண்டுகால ஆட்சியில் 1 மருத்துவ கல்லூரி கூட கொண்டு வரவில்லை என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sellur Raju has listed the shortcomings of the DMK


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->