2019 இலங்கை பயங்கரவாத தாக்குதல் விவகாரம்.. இன்டர்போல் மற்றும் இந்தியா உதவியுடன் குற்றவாளி கைது?..! - Seithipunal
Seithipunal


இலங்கை நாட்டில் கடந்த 2019 ஆம் வருடத்தின் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட நபர் அடையாளம் காணப்படுவார் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் 211 பேர் தற்போது வரை காவலில் எடுக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக 269 பேர் கொலை செய்யப்பட்ட கொழும்பு ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணையக்குழு அறிக்கையின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக, பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரி அட்மிரல் சரத் வீரசேகரே செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்தார். 

இது தொடர்பான பேட்டியில், " ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினை சார்ந்த 9 பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்த உள்ளூர் மதகுரு நௌபர் மௌசல்வி அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். 

இவருக்கு உடந்தையாக அஜ்புல் அக்பர் என்பவர் இருந்துள்ளார். தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் மனைவி சாரா ஜாஸ்மின் உயிருடன் இருந்தால், அவரை இண்டர்போல் மற்றும் இந்திய அரசு உதவியுடன் கைது செய்வோம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2019 Srilanka Easter Attack Govt Announce With Help of Interpol and India Shortly Arrest Terrorists


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->