ஆப்கானிஸ்தானை அலறவிட்ட நிலநடுக்கம் - 120 பேர் பலி.!
120 peoples died earthquake in afkhanisthan
ஆப்கானிஸ்தானை அலறவிட்ட நிலநடுக்கம் - 120 பேர் பலி.!
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக எட்டு முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி தெரிவிக்கையில், "நிலநடுக்கத்தில் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்றுத் தெரிவித்து உள்ளார். இந்த தொடர் நிலநடுக்கத்தால், நகரில் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
உயர்ந்த கட்டிடங்களில் இருந்து பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
English Summary
120 peoples died earthquake in afkhanisthan