இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.! இன்றும் 13 மாவட்டங்களில் தொடருமாம்.!
yestraday night heavy rain some district
நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது, இந்தநிலையில் இன்றும் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் போரூர், வடபழனி, கிண்டி, ராயப்பேட்டை, அண்ணாநகர், அசோக்நகர் உள்ளிட்ட நகரின் பல பகுதியில் நேற்றிறவு மிதமான மழை பெய்தது.
அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் அதன் சுற்றவட்டார பகுதிகளில் மழை பெய்தது. அந்தவகையில், செய்யாறு, வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகலும் நேற்றிரவு திடீரென கனமழை பெய்தது. 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு தொங்கிய கனமழை விடிய விடிய பெய்தது. அதன்படி வேளாங்கண்ணி,நாகூர், ,திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று இரவு காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்,ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
தமிழகத்தில் நிலவி வரும் வெப்பசலத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
yestraday night heavy rain some district