தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.. இந்த ஆண்டு வச்சு செய்யப்போகும் கனமழை.. வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 29-ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. 

இந்த பருவமழை நீண்டகால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்ப்பதை விட அதிகமாக பருவ மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் மழை பொழிவு அதிகம் இருக்கும் என்றும், வடகிழக்குப் பகுதிகளில் குறைவாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இதனால், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ,நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south west monsoon start for tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->