வெளுத்து வாங்கிய மழை... குளிர்ந்தது சென்னை...! - சுட்டெரித்த வெயிலுக்கு குட்-பை சொல்லி மகிழ்ச்சியில் மக்கள்...!
rain Chennai has cooled down People are happy to say goodbye scorching sun
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் முதல் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டலச் சுழற்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வட தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தின் சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, வேப்பேரி, அசோக் நகர், பெரியமேடு, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்ததால் சாலைகளில் ஈரப்பதம் அதிகரித்து, நகரின் இயல்பான பரபரப்புக்கு மத்தியில் குளிர்ச்சியான சூழல் உருவானது.கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் கடும் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில், இன்று திடீரென பெய்த மழை நகரின் வெப்பத்தை கணிசமாகத் தணித்துள்ளது. மழைக்குப் பிறகு வீசிய குளிர்ந்த காற்றும், நிலவிய இதமான வானிலையும் பொதுமக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளன.நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த இந்த மழையால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
English Summary
rain Chennai has cooled down People are happy to say goodbye scorching sun