புரெவி புயல்., நாள் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையம்.! சிக்கியது தமிழகத்தில் ஒரு மாவட்டம்.! 
                                    
                                    
                                   Puravi Cyclone date 
 
                                 
                               
                                
                                      
                                            இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, "தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கரையை கடக்கும்." என்று தெரிவித்து இருந்தது.
இதேபோல், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வெளுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக 2,3 மற்றும் 4ம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் 4ம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே புயல் கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.