5 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலார்ட்" - வானிலை மையம் தகவல்.!
orange alart to five districts in tamilnadu
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவி வருகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
இதற்கிடையே தாழ்வு மண்டலம் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் என்பதால், நாளை மறுதினமும் அதற்கு அடுத்த நாளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
English Summary
orange alart to five districts in tamilnadu