வங்கக்கடலில் புது புயல்...!சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்! - வானிலை மையம் எச்சரிக்கை
New storm Bay of Bengal Orange alert Chennai Meteorological Department warns
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, மலாக்கா ஜலசந்தி—தெற்கு அந்தமான் கடல்—அரபிக்கடல் என மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் செயல்படும் வானிலை சுழற்சிகள், அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகும் வாய்ப்பை அதிகரித்து வருகின்றன.
மலாக்கா ஜலசந்தி மாற்றம்: தீவிர தாழ்வு, புயலாக வலுப்படும் வாய்ப்பு
23-ம் தேதி மலாக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 24-ம் தேதியளவில் மலேசியா–மலாக்கா ஜலசந்தி பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது.
இன்று (25-11-2025) இது மீண்டும் தெற்கு அந்தமான் கடலில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக, இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்படும் என வானிலை மையம் தெரிவிக்கிறது.
குமரிக்கடலில் இரண்டாவது சுழற்சி – புதிய தாழ்வு உருவாகும் அறிகுறி
23-ம் தேதி உருவான குமரிக்கடல் கீழடுக்கு சுழற்சி கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியிலேயே நிலைத்திருக்கிறது.
இதன் தாக்கத்தால் இன்று குமரிக்கடல்–இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய தாழ்வு உருவாகும் வாய்ப்பு காணப்படுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடலில் மூன்றாவது சுழற்சி தொடருகிறது
அரபிக்கடலில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சியும் தொடர்ந்து செயல்பட்டுவருவதால், மூன்று சுழற்சிகளின் கூட்டு தாக்கம் மழை அமைப்பை அதிகரிக்கிறது.
இன்று (25 நவம்பர்): தமிழகத்தில் மழை நிலை
கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்கள் — லேசான முதல் மிதமான மழை
உள் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் — இடியுடன் கூடிய மழை
புதுச்சேரி & காரைக்கால் — மிதமான மழை வாய்ப்பு
கனமழை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்
புதிய புயலுக்கு ‘சென்யார்’ என்ற பெயர் – அர்த்தம் ‘சிங்கம்’
வங்கக்கடலில் உருவாக உள்ள புதிய புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
அரபு மொழியில் ‘சென்யார்’ என்பது சிங்கம் எனப்படும்.
முதற்கணிப்பின்படி, இந்த புயல் சென்னை – நாகை இடையே கரையைத் தாக்க நேர வாய்ப்பு உள்ளது.
29-ந்தேதி சென்னைக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை
வானிலை மையம் 29-ந்தேதி சென்னைக்காக மிக கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் கன–மிக கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சென்னை இயக்குனர் அமுதா கூறியதாவது,"சென்னை & செங்கல்பட்டு — இம்முறை சாதாரணத்தை விட குறைவான மழை பெற்றுள்ளன.ஆனால் 29-ந்தேதி மிக கனமழை வரக்கூடும்.நவம்பர் 29-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான், லட்சத்தீவு, தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்திலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
English Summary
New storm Bay of Bengal Orange alert Chennai Meteorological Department warns