வந்தே பாரத் ரெயில் விபத்தில் இளம்பெண் இளைஞர் மரணம்! மர்மம் சூழ்ந்த தண்டவாளச் சாவுக்கு காரணம் என்ன...? - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிக்கபனவரா ரயில் நிலையம் அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. தண்டவாளத்தருகில் இளம் பெண் மற்றும் இளைஞர் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பரபரப்படைந்தனர்.

முதற்கட்டத் தகவலின்படி, அவர்கள் மீது ரெயில் மோதியதில் பலியானது உறுதியாகியுள்ளது.தகவல் கிடைத்ததும் யஷ்வந்தபுர ரெயில்வே போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பெலகாவியிலிருந்து பெங்களூருவுக்கு வந்துகொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் இருவரையும் மோதியதில் உயிரிழப்பு ஏற்பட்டது போலீசார் கண்டறிந்தனர்.

பின்னர், இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.விசாரணையின் போது, பலியானவர்கள் கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த ஜஸ்டின் ஜோசப் (20) மற்றும் ஸ்டெர்லின் எலிசா சாஜி (19) என அடையாளம் காணப்பட்டனர்.

இருவரும் ஒரே கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்த நண்பர்கள் என்றும், சிக்கபனவரா பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வந்ததும் தெரியவந்தது.சம்பவ நாளில், இருவரும் மதியம் வெளியே சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் ரெயில் விபத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது.

அவர்கள் தண்டவாளம் கடக்க முயன்றபோது ரெயில் மோதியதா? அல்லது இது தற்கொலை முயற்சியா? என்பது தெளிவுபடவில்லை.இந்தக் கேள்விக்கான பதிலை அறிய ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வந்தே பாரத் ரெயிலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. அவற்றின் மூலம் சம்பவத்தின் உண்மை நிலை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young woman and young man died Vande Bharat train accident What cause mysterious track death


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->