திருமணவேளையில் திரை கிழிந்த ரகசியம்! மணமகனின் உண்மையை அறிந்த மணமகள் புயலாய் வெளியேறினார்...! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் மேற்கு சாம்பரான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், பைதாபூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளில், பந்த்–வாத்தியங்கள் முழங்க அதிரடியாக ஊர்வலமாக மணமகன் குடும்பம் மேற்கு சாம்பரானுக்கு சென்று, திருமண ஏற்பாடுகள் உற்சாகமாக தொடங்கின.

இந்நிலையில், மணமகன் நீண்ட நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிந்திருந்தது மணமகளின் கவனத்தை ஈர்த்தது. ஏதேனும் ரகசியம் மறைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மனதில் எழுந்தாலும், அதையே உடனடியாக வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார்.

ஆனால், முக்கிய திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகன் திடீரென கண்ணாடியை அகற்றியார். அதுவே உண்மை வெளிவந்த தருணம். அவருக்கு கண் குறைபாடு இருப்பதை மணமகள் அதிர்ச்சியாக உணர்ந்தார்.

இந்த முக்கிய தகவல் திருமணத்துக்கு முன் மறைக்கப்பட்டதிலே அவர் கடும் கோபம் அடைந்தார்.இதனைத் தொடர்ந்து, மணமகள் நேரடியாக மேடையிலேயே திருமணத்தை ரத்து செய்து, மண்டபத்திலிருந்து வெளியேறி விட்டார்.

காணமல் போன நிமிடங்களில், மண்டபம் பரபரப்பாகி, விருந்தினர்கள் இடையே பரபரப்பு நிலவியது.இந்த அதிரடி சம்பவம் தொடர்பான தகவல்கள், சமூக வலைதளங்களில் ஒளி வேகத்தில் பரவி வைரலாகிக் கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

secret veil being torn during wedding bride stormed out after learning grooms truth


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->