வேத மந்திரங்கள் முழங்க அயோத்தியில் அதிசயம்...! ராமர் கோவில் சிகரத்தில் மோடி காவிக்கொடி ஏற்றும் விழா...!
miracle Ayodhya Vedic mantras chanted Modi hoists saffron flag Ram temple peak
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) வரலாற்று நிமிடங்களை உருவாக்குவதற்காக உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு புறப்படுகிறார். புதிதாக எழுந்து நிற்கும் ராமர் கோவிலின் சிகரத்தில், அதன் கட்டுமான நிறைவை அறிவிக்கும் சின்னமாக, மோடி காவிக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
10 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட முக்கோண காவிக்கொடி, ராமரின் வீரத்தையும் ஞானத்தையும் பிரதிபலிக்கும் விதமாக ‘சூரியன்’ சின்னத்தையும், ‘ஓம்’ எழுத்தையும் தாங்கி வரும். அயோத்தியில் தங்கும் போது, மஹரிஷி வால்மீகி, விஸ்வாமித்திரர் உள்ளிட்ட முனிவர்களுக்காக கட்டப்பட்டுள்ள சப்த மந்திர் மற்றும் சேஷாவதார் மந்திர் கோவில்களுக்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வார்.

மேலும், மாதா அன்னபூர்ணா கோவிலிலும் அவர் சிறப்பு பூஜை செய்ய உள்ளார்.பிரதமரின் வருகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தியில் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். நகரமெங்கும் பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.முன்னதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில்,“பிரதமர் மோடி நவம்பர் 25ஆம் தேதி ராம ஜன்மபூமி கோவிலுக்கு வருகை தருகிறார்.
காலை 10 மணிக்கு மஹரிஷி வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகத்தியர், வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோவில்களை அவர் தரிசனம் செய்கிறார். பின்னர் சேஷாவதார் கோவிலுக்கும் செல்கிறார்.காலை 11 மணிக்கு அன்னை அன்னபூர்ணா தேவி கோவிலிலும் தரிசனம் செய்கிறார்.
பின்னர் ராம் தர்பார் கர்ப்பக்கிரஹத்தில் பிரதமர் பூஜையில் ஈடுபடுகிறார். அதன் பின் குழந்தை ராமர் கர்ப்பக்கிரஹத்திலும் தரிசனம் நிகழ்கிறது.நண்பகல் 12 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, ராம ஜன்மபூமி கோவிலின் சிகரத்தில் பிரதமர் காவிக்கொடியை ஏற்றி வைப்பார். இது கோவிலின் கட்டுமான நிறைவு, கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் தேசிய ஒற்றுமையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் பிரதமர் மக்களிடம் உரையாற்ற உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
miracle Ayodhya Vedic mantras chanted Modi hoists saffron flag Ram temple peak