இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தடுத்து பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில்  மழை பெய்துள்ளது. 

இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு, இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்தார்.

மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். அதே போல காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த இரு தினங்களுக்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro center new announcement


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal