அடுத்த 3 நாட்களுக்கு அலர்ட்.. வட தமிழகத்தில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய வளிமண்டபத்தின் மேல் கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் ஒன்றிணைவதால் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இதற்கிடையே இன்று (மே-1) காலை முதல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் சிட்லபாக்கம், பல்லாவரம், மடப்பாக்கம், கேகே நகர், துரைப்பாக்கம், குரோம்பேட்டை, மயிலாப்பூர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. 

இந்த நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாளை (மே-2) நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இடி மின்னூட்டக்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை மறுநாள் (மே-3) வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல்,  தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IMD alerts heavy rain in northern districts for next 3days


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->