தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடிமின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்...! - Seithipunal
Seithipunal


தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மேலாக கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதையின் தாக்கம் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.அதன்படி, திருச்சி, கோயம்புத்தூர்,அரியலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர்,கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை,  தேனி, நீலகிரி, திருவாரூர்,  திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலத்தில் நிலவும் மாற்றங்களால் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப தங்களது பயணங்களை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rain thunder and lightning likely 21 districts Tamil Nadu till 7 pm Meteorological Department


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->