சென்னையில் கன மழை! வாகன ஓட்டிகள் அவதி! - Seithipunal
Seithipunal


சென்னையில் திடீரென கொட்டி தீர்த்த மழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

சென்னையைபொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மூட்டமாக இருக்கும் என அறிவித்திருந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக கோடம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், எழும்பூர், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கோவர்த்தகிரி, பருத்திப்பட்டு, அசோக் நகர், மாம்பலம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ஆவடி பகுதியில் அதிகனமழையின் காரணமாக இருண்ட சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆவடிபகுதியில் குறிப்பாக ராணுவ சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பருத்திப்பட்டு உள்ளிட்ட இடங்களில் அதிகன மழை பெய்து வருகிறது. திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in Chennai and Motorists suffer


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal