திருமண வாழ்வில் 02-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவர் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இவரது மனைவி ரூத் 46 வயதில், நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி காலமானார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின் மனைவி இறந்து 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. தற்போது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அண்டோனியா லின்னேயஸ்-பீட் என்பவரை 02வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுள்ள நிலையில்,  இதனை ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

முதல் மனைவி ரூத் மறைந்த பின்னர் அவர் நினைவாக புகைப் பிடிக்காமல், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக 'ரூத் ஸ்ட்ராஸ் பவுன்டேசன்' என்ற அறக்கட்டளையை ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் 02 வது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former England captain Andrew Strauss has remarried for the second time


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->