எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதே முதல் இலக்கு –பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கு.. தை பிறக்கட்டும்.. ஒரே போடாக போட்ட ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கிறது. 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்று அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளிவிட்டார். அவரை வீழ்த்துவதுதான் நமது முதல் நோக்கம். வரும் தேர்தலில் அவருக்கு கட்டாயம் பாடம் புகட்ட வேண்டும்” என்று கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி இடம்பெறும் எந்த கூட்டணியிலும் சேரக் கூடாது என்று ஒருமித்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, “மூன்று தொகுதிகளுக்காக எடப்பாடி இருக்கும் என்டிஏ கூட்டணியில் சேர வேண்டாம். எடப்பாடி பழனிசாமி இல்லாத எந்த அணியாக இருந்தாலும் அதனுடன் கூட்டணி அமைக்கலாம்” என நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கூட்டத்தில் பேசிய குன்னம் ராமச்சந்திரன், “வெறும் 3 தொகுதிகளுக்காக எடப்பாடி இருக்கும் என்டிஏ கூட்டணியில் இணைவது தவறு” என கூறினார். வைத்திலிங்கம் பேசுகையில், “குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல அதிமுக ஆகிவிட்டது. எடப்பாடி இல்லாத அதிமுகவில்தான் இணைவோம்” என விமர்சித்தார்.

இதற்கிடையே, அதிமுக–பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரனை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பின்னணியில், இன்று தமிழகத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. அந்த சந்திப்பில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைவதற்கு எடப்பாடி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் நடந்த தொண்டர் உரிமை மீட்பு குழு கூட்டத்தில், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், “யாருடன் கூட்டணி என்பதற்கு தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று கூறினார். மேலும் அவர், “தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஒருகாலத்தில் வெல்ல முடியாத இயக்கமாக இருந்தது. ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவை படுகுழியில் தள்ளிவிட்டார். அவரை வீழ்த்துவதே நமது இலக்கு” என்று மீண்டும் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The first goal is to defeat Edappadi Palaniswami Im ashamed to even mention his name Let the baby be born OPS that was put in one go


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->