வெயில் வெளுத்து வாங்கப்போகுது...! தப்பிக்க மத்திய அரசு வெளியிட்ட 'அவசர' வழிகாட்டு நெறிமுறைகள்...! - உடனே தெரிஞ்சுக்கோங்க...!
heat about to get intense central government has issued emergency guidelines help you escape Find out immediately
கோடை வெப்பம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய வெப்பத்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். எனவே அந்த நேரங்களில் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்த்து, அவசியமான காரணம் இல்லையெனில் வீட்டிலேயே இருப்பது நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் சமையல் பணிகளை சுருக்கிக்கொள்வதுடன், வெப்பம் அதிகம் தேங்கும் சமையலறை பகுதிகளில் நீண்ட நேரம் இருப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடும் வெயிலின் போது நீண்ட நேர உடற்பயிற்சி, வெளிப்புற விளையாட்டு மற்றும் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளில் ஈடுபடுவது வெப்பச் சோர்வு மற்றும் நீரிழப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது பானங்கள், தேநீர், காபி, செயற்கை குளிர்பானங்கள் மற்றும் அதிக இனிப்புச் சத்து கொண்ட பானங்கள் உடலின் நீர்ச்சத்தை குறைக்கக்கூடும் என்பதால் அவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்வதையும், நீண்ட நேரம் சேமித்து வைக்கப்பட்ட உணவுகளை உண்பதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், பழச்சாறுகள் மற்றும் நீர்ச்சத்து மிக்க உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், இலகுவான ஆடைகளை அணிதல் மற்றும் உடலின் நீர்ச்சத்தை சீராக பராமரித்தல் மிகவும் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறிய அலட்சியம்கூட வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த காலகட்டத்தில், உடல்நல பாதுகாப்பை முதன்மையாகக் கருதி அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
heat about to get intense central government has issued emergency guidelines help you escape Find out immediately