உஷார் மக்களே!அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தெரியுமா...? 
                                    
                                    
                                   Do you know which districts have chance rain next 3 hours
 
                                 
                               
                                
                                      
                                            சென்னை வானிலை ஆய்வு மையம்,"மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்" என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.அவ்வகையில்,சென்னை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர்,  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், திருவள்ளூர்,சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Do you know which districts have chance rain next 3 hours