இன்று மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா?
Do you know districts likely receive rain until 6 pm today
சென்னை வானிலை ஆய்வு மையம்,"மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் வடக்கு திசையில் ஒருசில இடங்களிலும், தெற்கு திசையில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம், "இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.
அவ்வகையில், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர்,திருவள்ளூர் ராணிப்பேட்டை, தர்மபுரி, காஞ்சிபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
English Summary
Do you know districts likely receive rain until 6 pm today