உதட்டில் பரு போய்,கருமை நீங்கி, சிவப்பு நிறம் காட்டும் சூப்பர் அழகு குறிப்புகள்...!
Super beauty tips to get rid of pimples lips remove dark spots and reveal red color
உதட்டில் பரு நீங்க:
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்துக் கொள்ளவும்.
அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில் மென்மையாகத் தடவவும்.
சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை கழுவவும். தொடர்ந்து ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
உதடுகள் சிவப்பாக மாற:
உதடுகள் சிவப்பாக மாற பீட்ருட் மற்றும் மாதுளம் பழம் மிகவும் உதவியாக இருக்கும். பீட்ரூட் உதடுகளை சிவப்பாக்குவதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பீட்ருட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் மிக விரைவிலேயே கவர்ச்சியாக மாறும்.

உதட்டிற்கு மேல் உள்ள கருமை நீங்க:
ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும்.
இதற்கு கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்து, வெள்ளையாவதற்கு உதவும்.
English Summary
Super beauty tips to get rid of pimples lips remove dark spots and reveal red color