இன்ஸ்டா காதலனை நம்பி ரயிலில் சேலத்துக்கு சென்ற சென்னை மாணவி: ஏமாற்றி நகையை பறித்துக்கொண்டு காணாமல் போன காதலன்: போலீசார் வலை வீச்சு..!
Chennai student went to Salem by train trusting her Instagram boyfriend cheated him stole his jewelry and disappeared
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரது இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கு ராகுல் என்ற பெயரில் பிரென்ட் ரிக்வஸ்ட் வந்துள்ளது. இதனை அம்மாணவி அக்செப்ட் செய்து பேசியுள்ளார்.
ராகுல் என்ற அந்த வாலிபன் ர் ஈரோட்டை சேர்ந்தவர் என்றும், தான் கல்லூரியில் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இருவரும் இன்ஸ்டாவில் தொடர்ந்து பேசியயா நிலையில், காதலர்களாக பழகி வந்துள்ளனர். இதனிடையே மாணவியை பார்க்க விரும்புவதாக, காதலன் ராகுல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேரில் வருவதாக தெரிவித்த மாணவி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் புறப்பட்டுள்ளார்.

அப்போது இடையில், மாணவியை தொடர்பு கொண்ட ராகுல், தான் சேலத்திற்கு வந்துள்ளதாகவும், அங்கு இறங்கி விட்டால், பஸ்சில் ஈரோட்டிற்கு சென்று விடலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி, அன்றிரவு சுமார் 09 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் இன்ஸ்டா காதலனை சந்தித்து மகிழ்ச்சியின் பின்னர் தான் கழிவறைக்கு செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்போது, காதலன் ராகுல் நகைகளுடன் தனியாக சென்றால் யாரேனும் உன்னை ஏமாற்றி பறித்து சென்று விடுவார்கள், அதனால் தன்னிடம் கொடுத்துவிட்டு செல்’ என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி, தான் அணிந்திருந்த 03 பவுன் தங்க வளையல்கள், ஒரு பவுன் செயின் மற்றும் லேப்டாப், செல்போன் வைத்திருந்த பை என சுமார் ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பொருட்களை ராகுலிடம் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மாணவி திரும்பி வந்து பார்த்தபோது ராகுல் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த 17 வயது மாணவி அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ராகுலை ரயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து, சூரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஏமாற்றி நகை பறித்து சென்றவரை தற்போது தேடி வருகின்றனர்.
English Summary
Chennai student went to Salem by train trusting her Instagram boyfriend cheated him stole his jewelry and disappeared