மன அழுத்தத்தை போக்கும் 10 எளிய, சக்திவாய்ந்த டிப்ஸ்...!
10 simple powerful tips to relieve stress
மன அழுத்தம் வந்தபின் காக்கும் முறைகள்:
எத்தகைய பதட்டத்தையும் தனித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேட்கலாம் அல்லது பாடலாம்.
மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழைத்து அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் அழுத்தம் குறையும்.
அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்.

வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.
நகைச்சுவை உணர்ச்சிதான் அழுத்தத்திற்கான உரிய மருந்தாகும்.
மன அழுத்தம் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம்.
தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும்.
உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது மிகவும் நல்லது.
செல்லப் பிராணிகள் இருந்தால் அதோடு விளையாடலாம்.
English Summary
10 simple powerful tips to relieve stress