உஷார் மக்களே! 10-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? 
                                    
                                    
                                   Beware people Do you know which districts are likely to receive heavy rain on 10th
 
                                 
                               
                                
                                      
                                            வருகிற 10-ந்தேதி அதாவது செவ்வாய்க்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்...சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டதாவது,"வருகிற 10-ந்தேதி வேலூர், தருமபுரி,திருப்பத்தூர், திருவண்ணாமலை,விழுப்புரம்,  ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
11-ந்தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நீலகிரி, அரியலூர், கிருஷ்ணகிரி,  தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர்,கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.தமிழகத்தில் ஒரு பகுதிகளில் வெப்பநிலை 2°-3° செல்சியல் இயல்பைவிட அதிகமாக பதிவாகும்.
இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகக்கூடும்.
                                     
                                 
                   
                       English Summary
                       Beware people Do you know which districts are likely to receive heavy rain on 10th