உஷார் மக்களே! மழையுடன் தரைக்காற்று மற்றும் சூராவளி காற்று வீசப்போகுது!!!- வானிலை ஆய்வு மையம்
Along with rain land breeze and gale force winds are expected Meteorological Department
காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.இது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,நேற்று (19-ந்தேதி) அதிகாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையை கடந்தது.

இதனிடையே,தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது நிலவுகிறது. அதேபோல் வடக்கு கேரளா - தெற்கு குஜராத் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு - வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதனால், 6 தினங்களுக்கு அதாவது இன்று (20-ந்தேதி) முதல் வரும் 25-ந்தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி,ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.இதில் வருகிற 3-ந்தேதி வரையில் தென்மேற்கு அரபிக்கடல், மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 9 செ. மீ, நடுவட்டம், பந்தலூர் பகுதிகளில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Along with rain land breeze and gale force winds are expected Meteorological Department