ராணுவத்தில் சேர விருப்போபமா? - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.!!
exam date announce for joined army
ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடக்க இருப்பதாக திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
"திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அக்னிவீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம்.
இந்தத் தேர்வு நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 18-ந்தேதியும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 19-ந்தேதியும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 20-ந்தேதியும் நடக்கிறது.
இதன் தொடர்ச்சியாக 21-ந்தேதி கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், 21 மற்றும் 22-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 22 மற்றும் 23-ந்தேதிகளில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 23 மற்றும் 24-ந்தேதிகளில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், 24 மற்றும் 25-ந்தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். தேர்வு நேரடியாக நடைபெறுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
exam date announce for joined army