மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்..ஏன் தெரியுமா?
Notice of contempt of court to the district collector Do you know why?
சட்டவிரோதமான கட்டிடங்களை அகற்றாத, புதுச்சேரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுச்சேரி, , முத்துப்பிள்ளை பாளையம், மாரியம்மன் கோவில் தெரு, கதவு எண்.46 இல் வசிக்கும், வீரரகு அவர்களின் மனைவி திருமதி பிரபா தேவி அவர்களுக்கு, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட, பிள்ளைச்சாவடி, சின்ன காலாபேட், புதுச்சேரி பொறியியல் கல்லுாரிக்கு எதிரில், பழைய ரீ.சர்வே எண்.200/4, ரீ.சர்வே எண்.200/4/B3-இல், சுமார் 64,638 சதுரடிகள் (60 ஆர், 0.5 சாந்தியார்) கொண்ட சொந்தமான இடம் உள்ளது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, N.T.சம்பத் என்பவர், மேற்படி இடத்தை, தனது சுய செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததுடன், தனது சுய செல்வாக்கைப் பயன்படுத்தி, புதுச்சேரி, நகர் ஊரமைப்பு அலுவலகத்திடமிருந்து, எந்தவிதமான கட்டிட அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாக மிகப்பிரமாண்டமான ஜேம்ஸ் கோர்ட் பீச் ரிசார்ட் (M/s. St. James Court Beach Resort) என்ற பெயரில், கட்டிடங்களைக் கட்டியுள்ளார்.
இதுகுறித்து, திருமதி பிரபா தேவி அவர்கள், மேற்படி சட்ட விரோதமானக் கட்டிடங்களை அகற்றுவதற்கு, புதுச்சேரி, மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தேதிகளில், கோரிக்கை மனுக்கள் அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு (W.P. No.17638/2023) தாக்கல் செய்தார்.
மேற்படி மனுவை விசாரித்த மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்,
12 வாரங்களுக்குள் மேற்படி ஜேம்ஸ் கோர்ட் பீச் ரிசார்ட் (M/s. St. James Court Beach Resort) கட்டிடத்தை இடித்து, அப்புறப்படுத்த வேண்டும் என்று, கடந்த 26.09.2023ஆம் தேதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். எனவே, பிரபா தேவி அவர்கள், சென்னை, உயர்நீதிமன்றத்தில், புதுச்சேரி மாவட்ட ஆட்சித்தலைவர் A.குலோத்துங்கன், புதுச்சேரி நகர் ஊரமைப்பு இயக்கத்தின் இயக்குனர் V.புவனேஸ்வரன் மற்றும் புதுச்சேரி நில அளவை பதிவேடுகளின் துறையின் வட்டாட்சியர் S.கூப்பன் ஆகியோர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Contempt Petition No.1288/2025) தாக்கல் செய்தார்.
மேற்படி வழக்கானது, கடந்த 13.08.2025ஆம் தேதி, விசாரணைக்கு வந்தது. மேற்படி சட்டவிரோதமான கட்டடங்களை அகற்றாத, மேற்படி புதுச்சேரி மாவட்ட ஆட்சித்தலைவர் A.குலோத்துங்கன், புதுச்சேரி நகர் ஊரமைப்பு இயக்கத்தின் இயக்குனர் V.புவனேஸ்வரன் மற்றும் புதுச்சேரி நில அளவை பதிவேடுகளின் துறையின் வட்டாட்சியர் S.கூப்பன் ஆகியோர்களுக்கு, மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி, வருகின்ற 10.09.2025ஆம் தேதிக்கு, வழக்கு தள்ளி வைத்துள்ளது. மனுதாரர் பிரபா தேவி சார்பாக, வழக்கறிஞர் ஜெ.அக்னி செல்வராசு ஆஜரானார்.
English Summary
Notice of contempt of court to the district collector Do you know why?