துரிதமாக செயல்பட்ட ஊழியர்! கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றப்பட்ட உயிர் ...!
quick acting employee life saved blink eye
கேரளா எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.அங்கு ஓடும் ரெயிலிலிருந்து இறங்கும்போது கீழே தவறி விழுந்த பெண்ணை,அங்கிருந்த ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி என்பவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கைகொடுத்து காப்பாற்றினார்.

இப்படி துரிதமாக இறங்கி ஒருவரை காப்பாற்ற முயன்ற ஊழியரை பிறரும் பாராட்டி வருகின்றனர்.மேலும் இது குறித்த cctv வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இருந்ததாவது,"ரெயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த விரைவு ரெயிலில் இருந்து கீழே இறங்க பெண் ஒருவர் முற்பட்டபோது ரெயிலின் வேகத்தால் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதைக்கண்ட அவ்வழியே சென்ற ரெயில்வே ஊழியர் ''ராகவன் உன்னி'' சற்றும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு காப்பாற்றினார்.
English Summary
quick acting employee life saved blink eye