நாளை 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..! வானிலை ஆய்வு மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கேரளா முழுவதும் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி, பெரும்பாலான இடங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. 

அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பலத்த மழையின் காரணமாக இடுக்கில் நிலச்சரிவு ஏற்பட்டது. மொத்தமாக 35 பேர் வரை நிலச்சரிவு, வெள்ளத்தால் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவமும் மீட்பு பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் உள்ள மக்களை மீட்டு வருகின்றனர். அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்து வரும் நிலையில், அதனை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காசர்கோடு, ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 districts orange alert in kerala


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal