Va Varalam Va | 'வா வரலாம் வா' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தேனிசை தென்றல் தேவாவின் இசையில், எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்.பி.ஆர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் "வா வரலாம் வா" திரைப்படம், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் மற்றும் இயக்குநர் எல்.ஜி. ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். கதாநாயகனாக பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக "மைம்" கோபி, முக்கிய கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ மற்றும் காயத்ரி ரெமா நடித்துள்ளனர்.

மேலும், இயக்குநர்கள் சிங்கம்புலி, சரவண சுப்பையா, நடிகை தீபா, நடிகர்கள் வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 40 குழந்தைகளும் நடித்துள்ளனர். 

 

தேனிசைத்தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மக்களின் பேரதரோவோடு 25 லட்சம் பார்வைகளை கடந்து, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், தேவாவின் தேனிசையோடு அவரின் குரலில், எஸ்ஜிஎஸ் மியூஸிக்ஸ் யூடியூப் தளத்தில் வெளியான 'வா வரலாம் வா' திரைப்படத்தின் முதல் பாடலான ''ஜில்லு ஜில்லு'' பாடலும் 21 லட்சம் பார்வைகளை கடந்து ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இளைய சித்தர் கோ.ப. செந்தில்குமார் அவர்கள் தனது திருக்கரங்களால் 'வா வரலாம் வா' திரைப்படத்தின் "சொல்லப்போறேன்" பாடலை வெளியிட்டுள்ளார்.

'வா வரலாம் வா' திரைப்படத்தின் 'சொல்லப்போறேன்' பாடல் :

பாடலாசிரியர் காதல் மதி வரிகளில், பாடகர் ஜித்தன்ராஜ் பாடியுள்ள இந்த "சொல்லப்போறேன்" பாடல் தற்போதுவரை 5 லட்சம் பார்வைகளை கடந்து, குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'வா வரலாம் வா' திரைப்படத்தின் டிரைலர் :

'வா வரலாம் வா' திரைப்படத்தின் 'ஜில்லு ஜில்லு' பாடல் :

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Va Varalam Va movie song Sollaporen


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->