தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையுமா..? அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ள தவெக..!
According to Tamil Nadu Exit Polls the TVK stands as an unshakeable force
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 05 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் தமிழகத்தில் திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நியூஸ் 18, JVC poll ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று, 'ஆக்சிஸ் மை இந்தியா' நிறுவனம் மட்டும் தவெக 120 இடங்கள் வரை பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இந்த கருத்து கணிப்புகள் ஒன்று பின் ஒன்றாக முரண்பாடான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மே 04-ஆம் தேதி வாக்கு எண்ணிகைக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள கருத்து கணிப்புகள் ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மையை கொடுக்காத நிலையில், தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சியமைத்தால் கூட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சிமைக்க முடியும் என கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த கருத்து கணிப்பு முடிவுகளில் படி, அனைத்துமே தவெக அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
According to Tamil Nadu Exit Polls the TVK stands as an unshakeable force