பெங்களூருவில் கனமழை; மருத்துவமனையின் வெளியே ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து 07 பேர் பரிதாப பலி..!
In Bengaluru 7 people tragically lost their lives after a side wall outside a hospital collapsed amidst heavy rains
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இன்று மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று பெங்களூருவில் ஓரிரு மணி நேரம் கன மழை பெய்ததோடு, பல இடங்களில் ஆலங்கட்டி மழையும் கொட்டித் தீர்த்தது.
இந்த கன மழை காரணமாக பெங்களூர் நகரின் பல பகுதிகளின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பெங்களூருவின் சிவாஜிநகர் பகுதியில் உள்ள பௌரிங் மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 07 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் சிவாஜிநகர் பகுதியில் உள்ள பௌரிங் மருத்துவமனை வெளியே சுமார் 08 அடி உயரமுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கன மழையின் காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அங்கு நின்றிருந்தவர்களில் 07 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதில், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த விபத்தில் சிக்கி 07 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் மருத்துவச் செலவுகளை கர்நாடகா அரசு ஏற்கும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 05 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
In Bengaluru 7 people tragically lost their lives after a side wall outside a hospital collapsed amidst heavy rains