மும்பை அணிக்காக அதிவேக சதம் மற்றும் ஐபிஎல் அணிக்காக தனது முதல் சதம் அடித்த ரிக்கல்டன்; சனத் ஜெயசூர்யாவின் சாதனை முறியடிப்பு..! - Seithipunal
Seithipunal


19-வது ஐபி எல் போட்டியில் 41 வது லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. புள்ளிபட்டியலில் 09 வது இடத்தில் உள்ள, மும்பை அணி, கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியுள்ளது. 

ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, முதலில் பேட்டிங் செய்தது.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் அதிரடியாக தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். அதில், 05 பவுண்டரிகள் 03 சிக்சர்கள் என அதிரடி காட்டிய வில் ஜாக்ஸ் 46 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, 55 பந்தில் 10 பவுண்டரிகள் 08 சிக்சர்கள் என நாலாபுறமும் சுற்றிக்காட்டிய காட்டிய ரிக்கல்டன் 123 ரன்கள் அடித்து அசத்தினார். ரிக்கல்டனின் அதிரடியால் 20 ஓவரில்  மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்கள் குவித்தது.

இன்றைய ஆட்டத்தில், 44 பந்தில் சதமடித்த ரிக்கல்டன் மும்பை இந்தியன்ஸுக்காக அதிவேகமாக சதமடித்த வீரராக சாதனை படைத்தார். 45 பந்தில் சனத் ஜெயசூர்யாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 123 ரன்கள் அடித்த ரிக்கல்டன் மும்பை இந்தியன்ஸுக்காக அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த வீரராக மாறியுள்ளார். அத்துடன், முதலிடத்தில் 114 ரன்களில் இருந்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையும் முறியடிக்கப்பட்டது. மேலேயும், ஐ.பி.எல். போட்டியின் ரிக்கல்டனின் முதல் சதமாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rickelton scores the fastest century for the Mumbai team his maiden century in the IPL


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->