குளிர்காலங்களில் வாகனங்களை ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது ஏன்?! - Seithipunal
Seithipunal


பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்:

குளிர்காலங்களில் வாகனங்களை ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது ஏன்?

மோட்டார் கார் போன்ற தானியங்கிகள் ஓடுவதற்கு, உள் எரிப் பொறிகள் இன்றியமையாதவை. இப்பொறியில் உள்ள மூடிய கொள்கலனுள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளும், காற்றும் கலந்த கலவையானது மிகுந்த அழுத்தத்தில் வெடிப்பொலியுடன் பற்றவைத்து எரியூட்டப்படுகிறது. இதனால் உள்ளேயிருக்கும் உந்துதண்டானது கீழே தள்ளப்படும். இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல கொள்கலன்களுள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக அங்குள்ள சுழல் தண்டானது சுழல்வதுடன், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சக்கரங்களும் சுழல ஆரம்பித்து, அதனால் காரும் ஓடத்துவங்குகிறது. எரிபொருளும், காற்றும் கலந்த கலவையானது எரியூட்டப்படுவதற்குப் பல காரணங்களிருப்பினும் அவற்றுள் வெப்பநிலை முக்கியமான ஒன்றாகும். குளிர்காலக் காலைப்பொழுதில் காரின் எஞ்சின் பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் உள்ளே எரிபொருளை பற்றவைப்பதற்கு தேவையான வெப்பநிலையை அடைய சிறிது நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக காரை ஓட்டத்துவங்குவதற்கு சற்று சிரமப்பட வேண்டியுள்ளது.

இந்நிலை குளிர்ப்பகுதிகளில் மிகச் சாதாரணமாக காணக்கூடியதாகும். மிகவும் குளிர்ந்த பகுதிகளில் இந்நிலையை சமாளிக்கும் பொருட்டு குறைந்த வெப்பநிலையில் எரியூட்டப்படக்கூடிய ஹைட்ரோகார்பன் சேர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்தி குறைவான வெப்பநிலையில் காரை ஓடத்துவங்கும்படிச் செய்கின்றனர்.

சோடா போன்ற மென்பானங்களில் சேர்த்தவுடன், அவை நுரையுடன் வெளியே பொங்கி வழிவது ஏன்?

மென்பானம் என்பது கரிமவாக்கம் செய்யப்பட்ட, மணம் நெடி சேர்ந்த வெறும் தண்ணீர்தான். அதாவது தண்ணீர் எந்த அளவு கரியமில வாயுவை கொள்ளுமோ அதைவிடக் கூடுதலான வாயுவை மீவுயர் அழுத்தத்தில் கலந்து உண்டாக்கப்பட்டவையே இத்தகைய மென்பானங்களாகும்.

இவை மிக உயர்ந்த அழுத்தத்திலும், குறைந்த வெப்பநிலையிலும் தயாரிக்கப்படுகின்றன. அப்போது வாயுவுக்கும், தண்ணீருக்கும் இடையே ஒரு வகைச் சமநிலை உருவாகிறது. பானம் நிரம்பியுள்ள கொள்கலனின் மூடியைத் திறக்கும்போது அழுத்தம் குறைந்து மேற்கூறிய சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் கூடுதலாக அடைக்கப்பட்டிருக்கும் வாயுவானது குமிழ்களாக வெளியேறத் துவங்குகிறது. அந்நிலையில் பானத்தில் சுற்றுப்புற அழுத்தத்திற்கும், வெப்பநிலைக்கும் ஏற்ற வகையில் புதிய சமநிலை உருவாகும். அப்போது உப்பைச் சேர்த்தால் சமநிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மீவுயர் அழுத்தத்தில் அடைக்கப்பட்ட வாயுவானது நுரைத்துக்கொண்டு குமிழ்களாக வெளியேறுகின்றது.

சேர்க்கப்படும் உப்பின் அளவுக்கேற்ப இந்நிகழ்ச்சி விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறும். கூடுதல் வாயு வெளியேறும் வரை இந்நிகழ்ச்சி தொடரும். பானம் நிரம்பிய கொள்கலனைத் திறக்காமலே, சற்று வேகமாக ஆட்டினால் கூட சமநிலை பாதிக்கப்பட்டு பானத்தில் நுரையுடன் கூடிய குமிழ்கள் உண்டாவதைக் காணலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why vehicle shut down in winder season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->