வாட்ஸப்பின் புதிய நிபந்தனைகள் மற்றும் மாற்றம் செய்யப்படும் விவரங்கள் என்ன?..!! - Seithipunal
Seithipunal


பேஸ்புக்கின் செயலியான வாட்ஸ்ஆப் தவிர்க்கமுடியாத செயலியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. தகவல்கள் ஒட்டுக் கேட்கப்படும் என்ற அச்சம் இல்லாமல் இருந்ததால், வாட்ஸ் அப்பை பலரும் உபயோகம் செய்து வந்த நிலையில், தற்போது பல புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகள் மற்றும் ரகசிய காப்பு விதிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலில் வரும் என்றும், இதனை பயனாளர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவர்களின் வாட்சப் செயலி முடக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றம் செய்யப்படும் விவரங்கள் என்ன என்று காணலாம். 

பயனாளர்களின் தகவல்கள், அலைபேசி எண், முகவரி, தினமும் வைக்கும் ஸ்டேட்டஸ், பணபரிவர்த்தனை என அனைத்துமே வாட்ஸ் அப்பால் சேகரித்து வைக்கப்படும். வாட்ஸ்அப் மூலமாக நடைபெறும் புதிய பண பரிவர்த்தனை என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தி, இந்த விவரங்களை சேமித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

எந்தவிதமான அலைபேசியை பயன்படுத்துகிறோம்?, எங்கு செல்கிறோம்? என்பதையும் இதன் மூலமாக கண்காணிக்கும். நமது வங்கிக் கணக்கு தொடர்பான விவரத்தையும் கண்காணிக்கும். நாம் எந்த வகையான பொருட்களை வாங்குகிறோம்?, எப்படி பணத்தை செலவழிக்கிறோம்? என்ற தகவலையும் அது சேமித்து வைத்துக்கொள்ளும். 

பயனாளர்கள் குறித்த விவரங்களை முகநூல் ஏற்கனவே பிற தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவது தெரியவந்துள்ள நிலையில், வாட்ஸ்அப் மூலமாகவும் இது அரங்கேற்றலாம் என அஞ்சப்படுகிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கில், வாட்ஸ்அப்பின் தலைமை நிறுவனமான ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp New Rules and Regulation Conditions Tamil 11 Jan 2021


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal