ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து: திடீர் ட்விஸ்ட் கொடுத்த ஓபிஎஸ்! திமுக தான் காரணமா? ஓபிஎஸ் அடுத்த அரசியல் நகர்வு? - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது ஓபிஎஸ்ஸின் வழக்கமாக இருந்து வந்தது. இம்முறையும் அவர் அதுபற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, போடி தொகுதி அலுவலகத்தில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் ஓபிஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து அவர் திமுகவில் இணையவிருக்கிறார் என்ற பேச்சு தீவிரமடைந்துள்ளது. மேலும், அவரது ஆதரவாளர்கள் பலர் வேறு கட்சிகளில் இணைந்ததும் அவரது அரசியல் நிலையை சவாலாக்கியுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, பாஜக கூட்டணியில் அவருக்கு இடமின்மை, ஆதரவாளர்கள் விலகல் ஆகிய சூழ்நிலைகளில் ஓபிஎஸ் அடுத்த கட்ட அரசியல் முடிவை எடுக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னை நிகழ்ச்சியை தவிர்த்து உள்ளூர் அளவில் மரியாதை செலுத்தும் முடிவு, அதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும், திமுகவில் இணையுவது குறித்து ஓபிஎஸ் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவரது அடுத்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் பெறும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jayalalithaa birthday event cancelled OPS gives a sudden twist Is DMK to blame OPS next political move


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->