திமுக கூட்டணியில் தேமுதிக! ஏக குஷியில் எல்கே சுதீஷ்! மாநிலங்களவை ஆசை நிறைவேறுமா? ஸ்ட்ரெய்ட்டா டெல்லி தான்! என்ன நடந்தது? - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமையும் என கருதப்பட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக), திடீரென திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வாழ்ந்த காலத்திலேயே திமுகவுடன் கூட்டணி அமையவில்லை. 2009 மக்களவைத் தேர்தல் முதல் 2024 வரை பல தேர்தல்களில் தனித்தும், அதிமுக மற்றும் பிற கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, திமுகவுடன் மட்டும் கைகோர்க்காத கட்சியாக இருந்தது. இந்த வரலாற்றை மாற்றிய முடிவாக 2026 தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்திய பிரேமலதா விஜயகாந்த், ஆரம்பத்தில் 20 தொகுதிகள் வரை கோரியதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் 6 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரிஷிவந்தியம், விருத்தாச்சலம், விருதுநகர் உள்ளிட்ட சில தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கூடுதல் பலனாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவி தேமுதிக பொருளாளரும், பிரேமலதாவின் சகோதரருமான எல்.கே. சுதீஷுக்கு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை வாயிலாக டெல்லி அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்பது சுதீஷின் நீண்டநாள் விருப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோதும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் மத்திய அமைச்சரவை வாய்ப்பு குறித்து சுதீஷ் எதிர்பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. 2026 தேர்தலிலும் அதே கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் ஒப்புதல் கிடைக்காததால் தேமுதிக திமுகவுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தேமுதிகவின் அங்கீகாரம் மற்றும் ‘முரசு’ சின்னம் தொடர்பான சிக்கலும் உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் குறைந்தது 8 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான் கட்சியின் அங்கீகாரம் மீட்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும், பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காகவே இந்த கூட்டணி முடிவு எடுக்கப்பட்டது என பிரேமலதா விளக்கம் அளித்தாலும், இது முழுக்க முழுக்க எல்.கே. சுதீஷின் அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா என்பது இன்னும் தெரியாத நிலையில், மார்ச் 16 நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தல் மூலம் சுதீஷ் டெல்லிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மொத்தத்தில், தேமுதிக – திமுக கூட்டணி அரசியல் சமநிலையை மாற்றுமா? அல்லது இது தனிப்பட்ட அரசியல் இலக்கை நோக்கிய நகர்வா? என்பது தேர்தல் முடிவுகளால் மட்டுமே தெளிவாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK in DMK alliance LK Sudheesh in Eka Khushi Will Rajya Sabha dream come true Straight Delhi is the only one! What happened


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->