22.10 லட்சம் இந்தியா்களின் கணக்குகள் முடக்கம் - காரணம் என்ன?!  - Seithipunal
Seithipunal


சமூக வலைதள நிறுவனங்களில் பெறப்படும் புகாா்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கும் விதமாக மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டுமென மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதன்படி, வாட்ஸ்ஆப் நிா்வாகம் மாதந்தோறும் புகாா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து  அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த ஜூன் மாதத்துக்கான அறிக்கையில், 22.10 லட்சம் இந்தியா்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், கடந்த மாா்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குகளையும், கடந்த ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளையும், கடந்த மே மாதம் 19 லட்சம் கணக்குகளையும்   வாட்ஸ்ஆப் நிறுவனம் முடங்கியுள்ளது. விதிமீறல் புகாா்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து, விதிமீறல் தொடர்பாக அளிக்கப்படும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத சமூக வலைதள நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிப்பதற்கான தீா்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp block report july 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->