வாட்சப்பில் அட்டகாசமான புதிய அப்டேட்.! பயனாளர்கள் மகிழ்ச்சி.!  - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட் போன் உலகத்தையே கையில் அடக்கி விட்டது என்று கூறினால், வாட்ஸ்-அப் உரையாடல்களை விரல் நுனியில் சுருங்கிவிட்டது. உலகம் முழுதும் இருக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை குறிவைத்து இஸ்ரேல் நிறுவனம் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கை ஊடுருவி விட்டதை சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் உறுதி செய்தது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட்டது. ஐபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பிங்கர்பிரின்ட் பாதுகாப்பை தற்போது ஆண்ட்ராய்டு தளத்திலும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மூன்றாம் தர பாதுகாப்பு செயலிகளை பயன்படுத்துவதனால் தகவல் பறிபோகும் ஆபத்து குறையும் என வாட்ஸ்அப் தரப்பு தெரிவித்து இருக்கின்றது.

இந்த சேவையை பயன்படுத்த வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். அதில் வரும் வழிமுறைகளை பின்பற்றினால் மொபைலில் கைரேகையுடன் வாட்ஸ்அப் செயலி இணைந்துவிடும். நம்முடைய வசதிக்கு ஏற்ப ஒரு நிமிடம், 30 நிமிடம் அல்லது வாட்ஸ் அப்பை விட்டு வெளியே வந்த மறுகணமே லாக் ஆகும்படி செட்டிங்ஸை அமைத்துக்கொள்ளலாம்.

அதிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளையும் இப்படியே கையாள வேண்டுமா என்றால் இல்லை என்று கூறலாம். ஐபோன்களில் புதிய அப்டேட் ஆக பேஸ் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா பயனாளர்களுக்கு டார்க் மோடு சேவையையும் புதிய அப்டேட்டில் கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app new update version


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal