வெற்றி...வெற்றி!!! பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி...!
Victory Pravlad missile test success
டி.ஆர்.டி ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு, இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இதில் இந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்யும் பணிகளும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஒடிசா கடற்கரையிலுள்ள 'அப்துல் கலாம்' தீவிலிருந்து, பிரளய் ஏவுகணை இன்று சோதித்துப் பார்க்கப்பட்டது.இந்த ''பிரளய் ஏவுகணை'' என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.இந்த பிரளய் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
குறிப்பாக இது பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
English Summary
Victory Pravlad missile test success