ஆசிரியர்கள் டார்ச்சரால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை: வால்பாறை அரசு பள்ளியின் 03 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு..!
Case registered against 03 teachers of Valparai Government School in connection with students suicide by setting herself on fire
கோவை வால்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி 09-ஆம் வகுப்பு மாணவி, ஆசிரியர்களின் டார்ச்சர் காரணமாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இதனால் மாணவியின் உடலை வாங்க மறுத்த பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து 03 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னரே மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க சம்மதித்துள்ளனர்.
முத்து சஞ்சனா (14). இவர், வால்பாறை ரொட்டிகடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 99-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மாணவியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.
பின்னர், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், மேல்சிகிச்சைக்காக மாணவி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்றிரவு உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் பள்ளியில் அவரது பள்ளி ஆசிரியர்கள் 03 பேர் எனவும், அவர்கள் மாணவியை மிகவும் டார்ச்சர் செய்ததாகவும், அதனால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவியின் தன்தை சக்திவேல் குமரன் கூறியதாவது: 'நான் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக உள்ளேன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வால்பாறை ரொட்டிகடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எனது மூத்த மகள் முத்து சஞ்சனா 09-ஆம் வகுப்பும், இரண்டாவது மகள் முத்து சாய்னா 05-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி காலையில் எனது மூத்த மகள் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நான் மருத்துவமனையில் சென்று பார்த்தேன்.
அப்போது எனது மகளிடம் கேட்ட போது, பள்ளியின் உள்ள அறிவியல் ஆசிரியர் சிந்தியா என்பவர் பலபேர் முன்பு தன்னை அவமானப்படுத்தியதாக கூறினார். மேலும், தமிழ் ஆசிரியர் ராணிபாய், மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து மன உளைச்சலை ஏற்படுத்தினார் எனவும், ஆங்கில ஆசிரியர் சியாமளா தேவி தொடர்ந்து தனது உருவம், நிறத்தை குறித்து கேலி செய்ததாகவும் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இவ்வாறு மூன்று ஆசிரியர்களும் தொடர்ந்து செய்த டார்ச்சர் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகி, மகள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும், அவரது இறப்புக்கு ஆசிரியர்கள் தான் காரணம். எனவே, ஆசிரியர்கள் 03 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், சிஇஓ ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
English Summary
Case registered against 03 teachers of Valparai Government School in connection with students suicide by setting herself on fire